இரு மின் உற்பத்தி நிலையங்களைஅமைக்கும் சிங்கப்பூர்

இரு மின் உற்பத்தி நிலையங்களைஅமைக்கும் சிங்கப்பூர்

1 mins read
1b94b4eb-26a0-436b-bdf4-a8988b8ee6a1
இரவில் வீவக இல்லங்கள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், தங்குதடையற்ற, நம்பகமான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இரண்டு மின் உற்பத்தை நிலையங்களை அமைக்கிறது.

2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அவை இரண்டும் 100 மெகாவாட் மினசாரத்தை உற்பத்தி செய்யும் என்று எரிசக்தி சந்தை ஆணையம் திங்கட்கிழமை அன்று ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மின் உற்பத்தி நிலையத்தைக் கட்டி, சொந்தமாக நடத்தும் உரிமையை பசிபிக்லைட் பவர் என்ற நிறுவனத்துக்கு ஆணையம் வழங்கியுள்ளது.

கடந்த 2023 டிசம்பரில் எரிசக்தி சந்தை ஆணையத்தின் சார்பில் எரிசக்தி சந்தை நிறுவனம் மின்சக்தி உற்பத்திக்கான உத்தேச திட்டங்களை சமர்பிக்குமாறு கேட்டுக் கொண்டது.

எதிர்பாராத நேரத்தில் மின்விநியோகம் பாதிக்கப்படும்போது தங்குதடையற்ற மின்சாரம் விநியோகம் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

புதிய மின்சார உற்பத்தி நிலையங்கள், 18 நிமிடங்களில் முழு அளவில் மின் உற்பத்தியை செய்யக்கூடியவை என்று பசிபிக்லைட் பவர் தலைமை நிர்வாக அதிகாரி யு டாட் மிங் தெரிவித்தார்.

மின்சாரத் தேவைக்கும் மின் விநியோகத்திற்கும் இடையே தொடர்ந்து நிலையான மின்சாரம் இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியம் என்றார் அவர்.

எரிசக்தி சந்தை ஆணையத்தின் தலைமை நிர்வாகியான நீயாம் ஷி சுன், சிங்கப்பூரின் பசுமை எரிசக்தியில் உடனடியாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரு நிலையங்களும் முக்கிய பங்காற்றும் என்று அறிக்கையில் ஒன்றில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்