காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்றியவருக்குச் சிறை

காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்றியவருக்குச் சிறை

1 mins read
afab30f7-ccd8-4685-9678-99c188212bba
சுயாண்டி தனது சூதாட்ட ஆசையை பூர்த்தி செய்வதற்காக மோசடி செய்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காப்புறுதி நிறுவனத்தை ஏழு ஆண்டுகளாக ஏமாற்றிய 46 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசியான சுயாண்டி என்பவருக்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 29) பத்து ஆண்டு, பத்து மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2010 மே முதல் 2017 செப்டம்பர் வரை அவர் போலியாக கோரிக்கைகளை விடுத்து 10.7 மில்லியன் வெள்ளிக்கு மேல் ஏமாற்றியிருக்கிறார்.

தனது சொந்த பேராசையை தீர்த்துக் கொள்ளவும் சூதாட்டத்திற்கும் அவர் முறைகேடாக பணத்தைப் பெற்றுள்ளார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மீதான இதர 14 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொண்டார். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்