டாடா பிளேயின் 10% பங்குகளை $136 மில்லியனுக்கு விற்ற தெமாசெக்

டாடா பிளேயின் 10% பங்குகளை $136 மில்லியனுக்கு விற்ற தெமாசெக்

1 mins read
93d1a549-2116-41a8-bb8b-d79357af2d04
டாடா பிளே நிறுவனத்திலிருந்து தெமாசெக் வெளியேறியது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெமாசெக் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவை வழங்கும் டாடா பிளே நிறுவனத்தில் வைத்திருந்த 10 விழுக்காட்டுப் பங்குகளைக் கிட்டத்தட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (S$136 மில்லியன்) விற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டாடா குழும நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு அது அவ்வாறு விற்றதாக எகனாமிக் டைம்ஸ் ஏப்ரல் 30ஆம் தேதி தெரிவித்தது.

இதன்மூலம், டாடா சன்ஸ் நிறுவனம் டாடா பிளே நிறுவனத்தில் இருக்கும் தனது பங்கை 70 விழுக்காடு உயர்த்தியுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

‘டிடிஎச்’ எனப்படும் நேரடியாக வீட்டுக்குத் தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றும் விதிமுறைகளுக்கு இணங்க, பங்குதாரர் மாற்றம் குறித்து டாடா பிளே நிறுவனம் தகவல், ஒளிபரப்பு அமைச்சிடம் தெரிவித்துள்ளது எனத் தகவலறிந்தவர்கள் கூறியதாக அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்