ஆயுதமேந்திய குழு கொள்ளை; இருவர் மீது குற்றச்சாட்டு

ஆயுதமேந்திய குழு கொள்ளை; இருவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
91d2ae3a-0046-4226-a9e7-e323ebbfdde3
ஆடவர்கள் ஏப்ரல் 27, 28ஆம் தேதிகளில் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஏப்ரல் 30ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டனர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூரில் ஆயுதங்கள் கொண்டு குழுவாகக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் இரண்டு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவத்தில் ரொக்கம், மின்னிலக்க நாணயங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருள்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவற்றின் மதிப்பு 4.34 மில்லியன் வெள்ளி இருக்கும் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஆடவர்கள் இருவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் வயது 28, 32 என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிங் ஆல்பர்ட் பார்க்கில் உள்ள ஒரு வீட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் 2 மணி வாக்கில் ஆடவர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் நான்கு கொள்ளையர்கள் 25 வயது முதல் 45 வயது வரை உள்ள 11 பேரிடம் அன்றிரவு கொள்ளையடித்தனர். பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கைக்கடிகாரம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள், சிங்கப்பூர் ரொக்கம், வெளிநாட்டுப் பணம், மின்னிலக்க நாணயங்கள் போன்றவற்றை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளையடித்த பிறகு அவர்கள் நால்வரும் மலேசியாவுக்குத் தப்பிச்சென்றனர். அதன்பின்னர் ஆடவர்களின் அடையாளங்களைக் கொண்டு சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு மலேசிய காவல்துறை உதவியது.

ஆடவர்கள் ஏப்ரல் 27, 28ஆம் தேதிகளில் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஏப்ரல் 30ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டனர்.

மற்ற இரு நபர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

ஆயுதங்கள் கொண்டு குழுவாக கொள்ளையில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 24 பிரம்படிகள் வரையிலான தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்