சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர் வாரியத்தில் போக்குவரத்து அமைச்சர்

போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர் வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என்றும் அது ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் வியாழக்கிழமை (மே 2) அன்று அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டது.

திரு சீ நிதியமைச்சின் இரண்டாவது அமைச்சராகவும் உள்ளார்.

ஆணையத்தின் இயக்குநர் வாரியத்தில் உள்ள துணைப் பிரதமர் , பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹெங் சுவீ கியெட், கலாசார, சமூக, இளையர், வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களின் பதவி மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் டான் சோர் சுவான் மே 31ஆம் தேதியுடன் இயக்குநர் வாரியத்தில் இருந்து வெளியேறுகிறார்.

12 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குநர் வாரியத்தில் இருந்த டான் பல நேரங்களில் சிறப்பான முடிவுகளை எடுக்க உதவியவர் என்று ஆணையத்தின் இயக்குநர் வாரியத்தின் தலைவராக உள்ள துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!