ஆடவர் ஒருவர் தனது சொந்த மகளை 11 வயது முதல் மானபங்கம் செய்வதிலிருந்து தொடங்கி பாலியல் துன்புறுத்தல் பின்னர் சில ஆண்டுகள் கழித்து பாலியல் வன்கொடுமை ஆகியவற்றுக்கு மகளை உட்படுத்தினார்.
அந்தச் சிறுமி தனது வேதனையைச் சொன்னால், மற்ற பல காரணங்கள் உள்பட, தன்னை யாரும் நம்பமாட்டார்கள் எனப் பொறுத்தார். இவற்றை தமது குடும்ப நண்பர் ஒருவரிடம் அந்தப் பெண் கூற அவர் பெண்ணின் தாயாரிடம் நடந்தவற்றைக் கூறிய பின்னரே தந்தையின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
அந்தக் குடும்ப நண்பர் இதுபற்றி பெண்ணின் தாயாரிடம் கூறிய உடனேயே அந்தத் தாய் குடும்ப நண்பர் கூறியது உண்மையாகத்தான் இருக்கும் என உடனடியாக நம்பினார். அதற்குக் காரணம் கணவருடன் அவர் தாம்பத்தியத்தில் சேர்ந்திருந்தபோது பெண்ணின் தந்தை மகளின் பெயரைக் கூறினார.
இதன் தொடர்பில் வெள்ளிக்கிழமை (மே 3) அன்று அந்த 47 வயது சிங்கப்பூர் ஆடவர் இரு பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவருக்கு 16 ஆண்டு சிறைத்தண்டனையும் 18 பிரம்படிகளையும் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.