தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லீக் பட்டத்துக்குக் கடும் போட்டி

1 mins read
0e655fd6-998d-4847-a4c7-40a31bcca196
உல்வ்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியின் எர்லிங் ஹார்லண்ட் (வலது). - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்துக்கான போட்டி சூடுபிடித்துள்ளது. இன்னும் சில ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் ஆர்சனல், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் ஆகிய குழுக்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

மே 4ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் உல்வ்ஸ் குழுவை 5-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி புரட்டிப் போட்டது. 35 ஆட்டங்கள் விளையாடியுள்ள நிலையில், சிட்டி 82 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மற்றோர் ஆட்டத்தில் போர்ன்மத்தை 3-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வீழ்த்தியது.

ஆர்சனல் இதுவரை 36 ஆட்டங்களில் களமிறங்கியுள்ளது. 83 புள்ளிகளுடன் அது லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

லிவர்பூல் 35 ஆட்டங்கள் களமிறங்கியுள்ள நிலையில் 75 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, பெர்ன்லியை 4-1 எனும் கோல் கணக்கில் தோற்கடித்து லீக் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு நியூகாசல் முன்னேறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்