பதவி குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை: டான் சீ லெங்

பதவி குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை: டான் சீ லெங்

1 mins read
71327c0a-d212-4034-bfba-6bf2738bf997
மனிதவள அமைச்சர் டான் சீ லெங் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் தமக்குக் கிடைக்கும் பதவி குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூரர்களுக்கு சேவை செய்யத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், தம்மை எந்தப் பொறுப்பில் வைத்தாலும் அதை முழு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு வேலை செய்வேன், எனது திறமைக்கு ஏற்றவாறு திரு லாரன்ஸ் வோங் பொறுப்பு வழங்குவார்,” என்று திரு டான் கூறினார்.

மனிதவள அமைச்சர் பதவியிலேயே தொடர விருப்பமா அல்லது வேறு அமைச்சுக்கு மாற விருப்பமா என்று செய்தியாளர்கள் கேட்ட போது மேற்காணும் பதிலை அவர் தெரிவித்தார்.

59 வயதான டாக்டர் டான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் துறையில் வேலை செய்தார். 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதன் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரானார். பின்னர் 2021ஆம் ஆண்டு அவர் மனிதவள அமைச்சராகவும், வர்த்தகம், தொழில்துறைக்கான இரண்டாவது அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்