தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தம்பி’ சஞ்சிகை கதவை மூடியது

1 mins read
8abc81d5-3bc3-4d0c-9b7b-a64f053a510d
ஹாலந்து வில்லேஜில் லோரோங் லிப்புட் சாலையில் ‘தம்பி’ சஞ்சிகையின் உரிமையாளர் பெரியதம்பி செந்தில்முருகன், 49, வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சஞ்சிகையில் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார்.  - படம்: த.கவி
multi-img1 of 7

ஹாலந்து வில்லேஜில் லோரோங் லிப்புட் சாலையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வந்த ‘தம்பி’ சஞ்சிகைக் கடை, ஞாயிற்றுக்கிழமையுடன் (மே 5) இரவு 9.20 அளவில் தனது கதவுகளை இழுத்து மூடியது.

நீர் தோய்ந்த கண்களுடன் கடை உரிமையாளர் பெரியதம்பி செந்தில்முருகன், 49, கடையின் கடைசி நாளன்று திரண்ட நெடுநாள் வாடிக்கையாளர்களை உபசரித்தார்.

பலர் அவருடன் படமெடுத்ததுடன், அவரது தோளில் தட்டி ஆறுதல் வார்த்தைகளைக் கூறினர். அவர்கள் திரு செந்திலுடன் புகைப்படம் எடுத்து, தம்பி கடை பற்றிய இறுதி நினைவுகளை ஆவணப்படுத்தினர்.

திரு செந்தில்முருகன் பட்டுக்கோட்டையில் பிறந்தவர். கடையைத் தொடங்கிய அவரின் தாத்தாவும் பட்டுக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஒவ்வொருநாளும் விடிகாலையில் செய்தித்தாள் விநியோகம் செய்துவிட்டு காலை 9 மணி அளவில் கடைக்கு வந்து வேலையைத் தொடங்குவார். “இனிமேல் கடை இல்லை,” என்றபோது அவர் குரலில் சொல்ல முடியாத வருத்தம் தெரிந்தது.

தகவல்: கி.ஜனார்த்தனன்.

குறிப்புச் சொற்கள்