3,000க்கும் அதிக மோசடிகள் தடுப்பு; $100 மில்லியனுக்குமேல் இழப்பு தவிர்ப்பு

3,000க்கும் அதிக மோசடிகள் தடுப்பு; $100 மில்லியனுக்குமேல் இழப்பு தவிர்ப்பு

1 mins read
92566ea6-6fa0-4531-8b6e-db26bb7db9b2
டிபிஎஸ், யுஓபி, ஒசிபிசி, ஹெச்எஸ்பிசி, ஜிஎக்ஸ்எஸ் மற்றும் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் ஆகிய வங்கிகளுடன் இணைந்து காவல்துறையின் மோசடிக்கு எதிரான நிலையம் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை 

சிங்கப்பூர் காவல்துறை மற்றும் வங்கிகளின் நடவடிக்கையால் 100 மில்லியன் வெள்ளிக்கு மேலான நிதி, மோசடியில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் நீடித்த நடவடிக்கையால் 3,000க்கும் மேலான மோசடிகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை மே 7ஆம் தேதி தெரிவித்தது.

டிபிஎஸ், யுஓபி, ஒசிபிசி, ஹெச்எஸ்பிசி, ஜிஎக்ஸ்எஸ் மற்றும் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் ஆகிய வங்கிகளுடன் இணைந்து காவல்துறையின் மோசடி தடுப்பு நிலையம் நடவடிக்கையில் ஈடுபட்டது.

வேலை மோசடி, இணைய விற்பனை மோசடி, முதலீட்டு மோசடி உள்ளிட்டவற்றால் எளிதில் மோசடிக்கு ஆளாவோரை எந்திரத்தின் தானியங்கி முறையில் அடையாளம் கண்டு அவர்கள் மோசடிகளில் சிக்காமல் இருக்க தகவல்கள் அனுப்பப்படும்.

மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை காவல்துறையும் வங்கிகளும் 12,500க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு 16,700க்கும் அதிகமான குறுஞ்செய்திகளை அனுப்பின.

காவல்துறையின் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையால் பலர் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் மோசடிகளில் சிக்காமல் விழிப்புடன் இருக்கும்படியும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைநிதி மோசடி