சிறிய வகை கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் 0.4 விழுக்காடு குறைந்து $93,604ஆகப் பதிவாகியுள்ளது.
பெரிய வகை கார்களுக்கான கட்டணம் $102,001லிருந்து $105,002ஆக உயர்ந்துள்ளது.
பொதுப் பிரிவுக்கான கட்டணம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஏலக்குத்தகையில் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட 1.4 விழுக்காடு அதிகரித்தது.
அதன் கட்டணம் தற்போது $104,689.
பொதுப் பிரிவுக்கான கட்டணத்தை மோட்டார் சைக்கிள்களுக்குப் பயன்படுத்த முடியாது. அதை மற்ற வாகனப் பிரிவுகளுக்குப் பயன்படுத்தலாம்.
இருப்பினும், அது பெரும்பாலும் பெரிய வகை கார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் $68,502லிருந்து $70,001ஆக ஏற்றம் கண்டது.
மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் 4.9 விழுக்காடு சரிந்து $9,503ஆகப் பதிவானது.

