தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணக்கார நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் நான்காவது இடம்

1 mins read
6fd107bc-2202-45a9-9051-c39e99bf8fc1
கூடிய விரைவில் ஜப்பான் தலைநகர் தோக்கியோவைப் பின்னுக்குத் தள்ளி பணக்கார ஆசிய நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பணக்கார நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. லண்டனை அது பின்னுக்குத் தள்ளியுள்ளதாக முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் தெரிவித்தது.

2023ஆம் ஆண்டில் மட்டும் சிங்கப்பூருக்கு 3,400 பெருஞ்செல்வந்தர்கள் இடம்பெயர்ந்ததாக அந்நிறுவனம் வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான உலகின் பணக்கார நகரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

முதலீடு செய்ய எளிதில் ரொக்கமாக மாற்றப்படக்கூடிய சொத்துகளைப் பொறுத்தவரை, குறைந்தது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (S$1.35 மில்லியன்) சொத்து வைத்திருக்கும் 244,800 பேர், குறைந்தது 100 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வைத்திருக்கும் 336 பேர், குறைந்தது ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வைத்திருக்கும் 30 பெருஞ்செல்வந்தர்கள் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ளனர்.

சிங்கப்பூரில் ‘மில்லியனேர்’ களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 64 விழுக்காடு உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கூடிய விரைவில் ஜப்பான் தலைநகர் தோக்கியோவைப் பின்னுக்குத் தள்ளி பணக்கார ஆசிய நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணக்கார நகரங்கள் பட்டியலில் கடந்த பல ஆண்டுகளாக முதலிடம் வகித்த லண்டன், தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்