தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீ ஹோங் டாட்: மோட்டார் சைக்கிள்களுக்கான ஒற்றை ‘இஆர்பி 2.0’ பெட்டிகள் கார்களுக்கு உகந்ததல்ல

1 mins read
f8b4f86c-f089-44a9-8340-138f027ac319
கார்களுக்குள் ஒற்றை ‘இஆர்பி 2.0’ பெட்டிகள் பொருத்தப்பட்டால் வெப்பமான நாள்களில் நிறுத்திவைக்கப்படும் கார்களில் அவற்றில் அளவுக்கு அதிகமாகச் சூடேறிவிடும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்படும் ஒற்றை ‘இஆர்பி 2.0’ பெட்டிகளை கார்களில் பயன்படுத்த முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் மே 8ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெப்பமான நாள்களில் மூடப்பட்டு, நிறுத்திவைக்கப்படும் கார்களுக்குள் வெப்பநிலை 50 முதல் 52 டிகிரி செல்சியஸ் எட்டக்கூடும் என்றார் அவர்.

இதனால் கார்களுக்குள் ஒற்றை ‘இஆர்பி 2.0’ பெட்டிகள் பொருத்தப்பட்டால் அவற்றில் அளவுக்கு அதிகமாகச் சூடேறிவிடும் என்று அமைச்சர் சீ கூறினார்.

இப்பிரச்சினையை எதிர்கொள்ள குளிரூட்டும் மின்விசிறி ஒன்றைப் பொருத்தலாம். ஆனால் அது காருக்குள் தேவைக்கும் அதிகமான பொருள்கள் இருக்கும் நிலையை ஏற்படுத்திவிடும் என்றார் அவர்.

மோட்டார் சைக்கிள்கள் திறந்த வெளியில் இருப்பதால் அவற்றில் இந்த ஒற்றை ‘இஆர்பி 2.0’ பெட்டிகளைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்