ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் முழு உறுப்பினராகச் சேர பாலஸ்தீனம் விண்ணப்பம் செய்துள்ளது. இதற்கு சிங்கப்பூர் உட்பட 143 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கவனமாகப் பரிசீலித்த பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாக சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்தது.
பாலஸ்தீனத்தின் விண்ணப்பம் குறித்து ஐநா சபையில் மே 10ஆம் தேதியன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் பாலஸ்தீனத்தின் விண்ணப்பத்தை ஆதரித்து 143 நாடுகள் வாக்களித்தன. ஒன்பது நாடுகள் எதிர்த்தன. எதிர்ப்பு தெரிவித்த நாடுகளில் அமெரிக்காவும் இஸ்ரேலும் அடங்கும். 25 நாடுகள் வாக்களிக்கவில்லை.

