பழைய மாணவர்கள் மேற்படிப்பிற்குத் திரும்பிவர விரும்பினாலும் செலவுகளும் வேலை மற்றும் குடும்பக் கடப்பாடுகளும் அவர்களைத் தடுப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வு குறிப்பிட்டு இருந்தது.
அரசாங்கம் அளித்த ஆதரவினாலும் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்களின் விளைவாகவும் கடந்த சில ஆண்டுகளில் அதிகமானோர் மேற்படிப்புக்காக சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களுக்குத் திரும்பி உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் சில பல்கலைக்கழகங்கள் கூறின.
இருப்பினும், அவ்வாறு திரும்பியோர் எத்தனை பேர் என்ற விவரங்களை அவை வெளியிடவில்லை.
படித்துக்கொண்டே வேலை செய்யும் பெரியோர்களின் கடப்பாடுகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சரிப்படுத்த மேலும் அதிக நீக்குப்போக்கான கற்றல் தெரிவுகள் தேவைப்படுவதாக பழைய மாணவர்களும் கல்வித்துறை நிபுணர்களும் கூறுகின்றனர்.
அவற்றுடன் மேலும் பழைய மாணவர்களின் மேற்படிப்புக்குப் பொருந்தக்கூடிய படிப்புகளும் முதலாளிகளின் சிறப்பான ஆதரவும் தேவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

