தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீச்சல் குளத்திற்கு வந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி; பொறியாளருக்குச் சிறை

1 mins read
6387288f-f757-4005-bc2d-6e36d01e1b56
தென்கொரியாவைச் சேர்ந்த பொறியாளருக்கு எட்டு ஆண்டுகள், நான்கறை மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நீச்சல் குளத்திற்கு வந்த பெண் போதையில் தூங்கிவிட்டார்.

இதனைப் பார்த்த பொறியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தென்கொரியாவைச் சேர்ந்த சோ டாவே குவோன், 51, திங்கட்கிழமை ( மே 13) அன்று தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.

பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதாகவும் மானபங்கப் படுத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

அவர் மீதான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொண்டார்.

சம்பவத்தன்று மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ஸ்வீடனிலிருந்து வந்திருந்த பெண் கண்டோமினிய நீச்சல் குள வளாகத்தில் உறங்கிவிட்டார்.

அவர், கண்விழித்துப் பார்த்தபோது அந்தப் பொறியாளர் தன்மீது படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ந்துவிட்டார். அவரிடம் கைகலப்பில் ஈடுபட்டு அவர் தப்பினார்.

சோவுக்கு ஐம்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் பிரம்படி தண்டனை விதிக்க முடியாது. அவருக்கு வயது 51. அவருக்கு எட்டு ஆண்டுகள், நான்கறை மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஹுயுண்டாய் மோட்டார் குழுமத்தின் புத்தாக்க நிலையத்தில் அவர் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.

குறிப்புச் சொற்கள்