புதுப்பிக்கத்தக்க டீசல்: சாங்கி விமான நிலையத்தில் ஓராண்டு சோதனைத் திட்டம்

புதுப்பிக்கத்தக்க டீசல்: சாங்கி விமான நிலையத்தில் ஓராண்டு சோதனைத் திட்டம்

1 mins read
9c00e4a9-b640-4456-b2ea-00d33c45419e
பயணப் பெட்டிகள், விமானத்தில் பரிமாறப்படும் உணவுவகைகள் ஆகியவற்றை கையாளும் டினாட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான 12 வாகனங்கள் ஏப்ரல் 26ஆம் தேதியிலிருந்து புதுப்பிக்கத்தக்க டீசலை பயன்படுத்தப்படுகின்றன. - படம்: சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்

விமானப் போக்குவரத்துத்துறையில் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சாங்கி விமான நிலையத்தின் வாகனங்களுக்கு ஓராண்டு சோதனைத் திட்டமாகப் புதுப்பிக்கத்தக்க டீசல் எரிபொருள் பயன்படுத்தப்படும்.

சாங்கி விமான நிலையத்தின் கனரக வாகனங்கள், பயணப் பெட்டிகளை ஏந்திச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு இந்த எரிபொருள் பயன்படுத்தப்படும்.

பயணப் பெட்டிகள், விமானத்தில் பரிமாறப்படும் உணவுவகைகள் ஆகியவற்றை கையாளும் டினாட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான 12 வாகனங்கள் ஏப்ரல் 26ஆம் தேதியிலிருந்து புதுப்பிக்கத்தக்க டீசலை பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றில் பயணப் பெட்டிகளை ஏந்திச் செல்லும் வாகனங்களும் அடங்கும்.

ஆறு மாதச் சோதனைத் திட்டத்தில் டினாட்டா நிறுவனம் ஈடுபடுகிறது.

அதன் வாகனங்களுக்கு எஸ்ஸோ புதுப்பிக்கத்தக்க டீசல் ஆர்20 வகை எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

அந்த டீசல் வகையை உற்பத்தி செய்ய குறைந்தது 20 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்.

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு போன்ற கழிவுப் பொருள்களால் புதுப்பிக்கத்தக்க டீசல் தயாரிக்கப்படுகிறது.

சாங்கி விமான நிலையத்தில் நடத்தப்படும் இந்தப் புதுப்பிக்கத்தக்க டீசல் சோதனைத் திட்டத்தில் மொத்தம் எத்தனை வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்று இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

இத்தகைய சோதனைத் திட்டங்கள், $50 மில்லியன் பெறுமானமுள்ள விமானப் போக்குவரத்து நீடித்த நிலைத்தன்மைத் திட்டத்தின்கீழ் நிதி பெற தகுதிபெறுகின்றன.

குறிப்புச் சொற்கள்