தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணமோசடி வழக்கு: ஆறாவது சந்தேக நபருக்குச் சிறை

1 mins read
6aed71c7-bfdb-43fa-a2fa-6fe92f9d5388
43 வயது வாங் ஷுய்மிங்கிற்கு 13 மாதங்கள், ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: இணையம்

பல பில்லியன் டாலர் மதிப்பிலான பணமோசடி தொடர்பான வழக்கில் ஆறாவது சந்தேக நபருக்கு மே 14ல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

43 வயது வாங் ஷுய்மிங்கிற்கு 13 மாதங்கள், ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடையவர்களில் இவர்தான் ஆக அதிகமான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

வாங் மீது மொத்தம் 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

அவற்றில் மூன்றை அவர் ஒப்புக்கொண்டார்.

தீர்ப்பளிக்கப்பட்டபோது மற்ற குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

அவரிடமிருந்து $198 மில்லியனுக்கும் அதிகப் பெறுமானமுள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாங், துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரிடம் சீனா, வனுவாட்டு, துருக்கி ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் உள்ளன.

இன்னும் பிடிபடாத மூன்று சந்தேக நபர்களுடன் வாங்கிற்கு தொடர்பு உள்ளது. அவர்களில் ஒருவர் வாங்கின் சகோதரர்.

குறிப்புச் சொற்கள்