சிங்கப்பூரில் பதிவான பில்லியன் டாலர் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய சூ ஜியான்ஃபெங் மீது மே 16ல் கூடுதலாக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவை அனைத்தும் மோசடிக் குற்றம் புரியும் நோக்கில் போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றங்களுடன் தொடர்பானவை.
வனுவாட்டு நாட்டைச் சேர்ந்த 36 வயது சூ மீது மொத்தம் 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம் தொடர்பாக காவல்துறை சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகளில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சூ கைது செய்யப்பட்டார்.
போலியானவை என்று தெரிந்தும் சொத்து விற்பனை ஒப்பந்தங்களை இரண்டு வங்கிகளிடம் சூ சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.