தொடக்கநிலை 1 மாணவர் சேர்க்கை பதிவு ஜூலை 2ல் தொடக்கம்

தொடக்கநிலை 1 மாணவர் சேர்க்கை பதிவு ஜூலை 2ல் தொடக்கம்

1 mins read
b5fc954c-e27e-4485-843d-a3c5903dbcf4
தொடக்கநிலை 1ஆம் வகுப்பு பதிவு இணையவாசல் மூலம் பதிவு செய்ய வேண்டும். கல்வி அமைச்சின் இணையப்பக்கம் வாயிலாக இந்த இணையவாசலுக்குச் செல்லலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2025ஆம் ஆண்டில் தொடக்கநிலை 1ஆம் வகுப்பில் சேர்ந்து பயில இருக்கும் மாணவர்களுக்கான பதிவு ஜூலை 2ஆம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு மே 16ல் தெரிவித்தது.

தொடக்கநிலை 1ஆம் வகுப்பு பதிவு இணையவாசல் மூலம் பதிவு செய்ய வேண்டும். கல்வி அமைச்சின் இணையப்பக்கம் வாயிலாக இந்த இணையவாசலுக்குச் செல்லலாம்.

தொடக்கநிலை 1ஆம் வகுப்புக்கான பதிவு செய்யும் முறையில் 1, 2A, 2B, 2C, 2C மிகைநிரப்பு (சப்லிமென்டரி) என ஐந்து பிரிவுகள் உள்ளன.

தங்கள் பிள்ளைகள் எந்தப் பிரிவின்கீழ் வருகின்றனர் என்பதை இணையவாசல் மூலம் பெற்றோர் தெரிந்துகொள்ளலாம்.

இதற்கிடையே, சிங்கப்பூரில் உள்ள தொடக்கப்பள்ளிகளைக் கொண்ட பட்டியல், அவற்றில் இருக்கும் காலி இடங்கள் குறித்த தகவல்கள் ஜூன் 25ஆம் தேதிக்குள் தொடக்கநிலை 1ஆம் வகுப்பு பதிவுக்கான இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

பெற்றோர் தங்கள் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி இணையவாசலுக்குச் சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்