சுற்றுப்பயணிகள் வருகை ஏப்ரல் மாதம் குறைந்தது

சுற்றுப்பயணிகள் வருகை ஏப்ரல் மாதம் குறைந்தது

படம்: சாவ்பாவ்

16 May 2024 - 6:16 pm

1 mins read

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதம் குறைந்தது.

ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 1.36 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை சிங்கப்பூர் வரவேற்றது.

தற்போதைய நிலவரப்படி, 2024ஆம் ஆண்டில் இதுவே மிகவும் குறைவான எண்ணிக்கை.

மார்ச் மாதம் அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட், கே-பாப் குழுவான ‘ஷைனீ’யின் இசைநிகழ்ச்சிகள் சிங்கப்பூரில் நடைபெற்றன.

இதன் காரணமாக சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

மார்ச் மாதத்தில் 1.48 மில்லியன் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்திருந்தனர்.

அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை சரிந்தது.

ஜனவரி மாதத்தில் 1.44 மில்லியன் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர்.

பிப்ரவரி மாதத்திலும் அதே எண்ணிக்கை பதிவானது.

ஜனவரி மாதத்தில் பிரிட்டிஷ் இசைக்குழு ‘கோல்டுபிளே’ சிங்கப்பூரில் பல இசை நிகழ்ச்சிகளை மேடையேற்றியது.

பிப்ரவரியில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டின.

அத்துடன், சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான பரஸ்பர 30 நாள் இலவச விசா திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏப்ரல் மாதம் சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளில் இந்தோனீசியர்கள் முதல் இடம் வகித்தனர். ஏப்ரல் மாதத்தில் இந்தோனீசியாவிலிருந்து 243,893 சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர்.

சீனா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அந்நாட்டிலிருந்து 220,444 சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர்.

மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்தது.

சிங்கப்பூருக்கு இந்தியாவிலிருந்து 106,703 பேர் பயணம் மேற்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்