சிங்கப்பூரையும் அமெரிக்காவையும் சேர்ந்த கிட்டத்தட்ட 670 ராணுவ வீரர்கள் அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் நடைபெற்ற வருடாந்திர பயிற்சியில் பங்கேற்றனர்.
43வது டைகர் பால்ம் என்ற அந்தப் பயிற்சி மே மாதம் 6ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை கூட்டுத் தளமான லூயிஸ்-மெக்கோர்ட், யகிமா பயிற்சி நிலையத்தில் நடந்தது என்று தற்காப்பு அமைச்சு சனிக்கிழமையன்று (மே 18) தெரிவித்தது.
அந்த வருடாந்திர பயிற்சி இரண்டு நாட்டு ராணுவங்களும் ஆகாய- நில ஒத்துழைப்பை வலுப்படுத்த வகை செய்கிறது.
“இந்த வருடாந்திர பயிற்சியானது இரு ராணுவங்களுக்கு இடையே தந்திரங்களையும் நுட்பங்களையும் நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. மேலும் இப்பயிற்சி அவற்றிற்கு இடையில் நீண்ட நெடுநாள்களாக நிலவி வரும் அணுக்க உறவின் அடையாளமாகத் திகழ்ந்தது,” என்று தற்காப்பு அமைச்சு கூறியது.

