அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறைக்குப் பயன்படுத்தப்படும் புதிய ஒபியு சாதனம் முன்புறம் உள்ள பயணியின் இருக்கைக்கு அருகே பொருத்தப்பட்டு வருகிறது.
இருந்தாலும் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், வாகன உரிமையாளர்கள் விருப்பம்போல் சாதனத்தைப் பொருத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.
அப்படியும் மாற்று இடம் குறித்து ஓட்டுநர்களில் சிலருக்கு திட்டம் எதுவும் இல்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
இதனால் பயணியின் இருக்கைக்கு அருகே பொருத்துவது குறித்து புகார்கள் வரவில்லை என்று அது மேலும் தெரிவித்தது.
இது தொடர்பாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்கு, மாற்று இடத்தில் சாதனத்தைப் பொருத்துவதற்கு வாகன உரிமையாளர்களிடமிருந்து இதுவரை கோரிக்கை பெறவில்லை என்று வெள்ளிக்கிழமை (மே 17) ஆணையம் கூறியது.
ஆனால் ஆரம்பகாலத்தில் சாதனத்தைப் பொருத்தும் இடத்தை மாற்ற முடியுமா என்பதை மதிப்பிடுவதற்கு நால்வர் தொடர்பு கொண்டதாக அது தெரிவித்தது.
மே 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் சீ ஹொங் டாட், ஆரம்பத்தில் பொருத்தப்படும் சாதனங்களுக்கு ஒரே ஒரு முறை மாற்று இடத்தில் பொருத்த இலவசமாக வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதன்படி பயணியின் காலடியில் பொருத்துவதற்குப் பதிலாக ஓட்டுநரின் காலடியின் பொருத்திக் கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
இஆர்பி 2.0 என்று அழைக்கப்படும் அடுத்த தலைமுறைக்கான ‘ஓபியு’ சாதனம் மூன்று பாகங்களைக் கொண்டது. செயலாக்கம், அலை வாங்கி, தொடுதிரை ஆகியவற்றை இது உள்ளடக்கியிருக்கிறது.