தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆறு நாள் கடற்படை பயிற்சியில் சிங்கப்பூர், இந்தோனீசியா பங்கேற்பு

1 mins read
c695f081-0087-4d9a-8b0b-fbdcd852fead
சிங்கப்பூர் குடியரசு கடற்படைவீரர்கள் இந்தோனீசிய கடற்படையுடன் இணைந்து ‘எக்சர்சைஸ் மினெக்ஸ் பாண்டு 2024’ என்ற கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள தயாராகின்றனர். - படம்: தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர், இந்தோனீசிய கடற்படைகளைச் சேர்ந்த 230க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆறு நாள் முக்குளிப்புப் பயிற்சியை மேற்கொண்டனர்.

நீருக்கு அடியிலிருந்து வரக்கூடிய ஆபத்துகளை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்ளும் ஆற்றலை மேம்படுத்த இந்த முக்குளிப்புப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

‘எக்சர்சைஸ் மினெக்ஸ் பாண்டு’ என்று பெயரிடப்பட்ட இந்த கூட்டு பயிற்சி பாத்தாம், பிந்தான் தீவுகளுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இம்மாதம் 14லிருந்து 19ஆம் தேதிவரை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பயிற்சியில், கடல் கண்ணி வெடிகளை தேடிக் கண்டுபிடிப்பது, அவற்றை அகற்றும் பயிற்சி, அதற்குப் பின் மீண்டும் கப்பலுக்கு திரும்புவது, ஆகியவற்றில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், கடற் கண்ணி வெடிகளினால் ஏற்படும் ஆபத்தை ஒருங்கிணைந்து எதிர்கொள்வது, முக்குளிப்புப் பயிற்சி, உண்மையான போர்ப் பயிற்சி ஆகியவையும் நடத்தப்பட்டதாக தற்காப்பு அமைச்சு ஞாயிறன்று (மே 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்தப் பயிற்சியில் சிங்கப்பூர் குடியரசு கடற்படை ஆர் எஸ் எஸ் பிடோக், ஆர் எஸ் எஸ் பொங்கோல் என்ற இரு கடற் கண்ணி வெடிகளை எதிர்கொள்ளும் திறன்பெற்ற போர்க்கப்பல்கள், கடற்படையின் முக்குளிப்புப் பிரிவு வீரர்களுடனும் ஈடுபட்டது.

இந்தோனீசியக் கடற்படை தன் பங்குக்கு இரு கடற் கண்ணி வெடிகளை எதிர்கொள்ளும் ஆற்றலுடைய இரண்டு போர்க்கப்பல்களுடன் கடற்படையின் முக்குளிப்புப் பிரிவு வீரர்களையும் பயிற்சியில் கலந்துகொள்ள அனுப்பியது.

குறிப்புச் சொற்கள்