சிங்கப்பூரில் இருக்கும் பழைமைவாய்ந்த மகளிர் பள்ளிகளில் கான்வன்ட் ஆஃப் தி ஹோலி இன்ஃபன்ட் ஜீசஸ் (சிஎச்ஐஜே) பள்ளியும் ஒன்று.
சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பழைய மகளிர் பள்ளி எனும் பெருமை சிஎச்ஐஜே பள்ளியைச் சேரும்.
இப்பள்ளி 1854ஆம் ஆண்டில் நான்கு கத்தோலிக்க பெண்துறவிகளார் நிறுவப்பட்டது.
பிராஸ் பசா சாலைக்கும் விக்டோரியா ஸ்திரீட்டுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் பள்ளி கட்டப்பட்டது.
1983ஆம் ஆண்டில் அது தோ பாயோவுக்கு இடம் மாறியது.
சிஎச்ஐஜே பள்ளி 2004ஆம் ஆண்டில் தன்னாட்சிப் பள்ளியாக மாறியது.
இந்நிலையில், மே 20ஆம் தேதியன்று சிஎச்ஐஜே பள்ளி அதன் 170வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
170வது ஆண்டு நிறைவு விழா சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
இதில் ஏறத்தாழ 16,000 பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் முன்னாள் ஊழியர்களும் முன்னாள் மாணவர்களும் கலந்துகொண்டு ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிங்கப்பூரின் ஓட்டப் பந்தய நட்சத்திரம் சாந்தி ஃபெரேரா இப்பள்ளியின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

