பாழான தொப்புள் கொடி ரத்தம்: பாதிக்கப்பட்ட 150க்கு மேற்பட்டோரைப் பிரதிநிதிக்கும் சட்ட நிறுவனம்

1 mins read
336b6fc6-d694-43e4-a377-bce0c0d66d37
அ - படம்: கார்ட்லைஃப்

தனியார் தொப்புள்கொடி ரத்தச் சேமிப்பு நிறுவனமான ‘கார்ட்லைஃப்’ வங்கியில் தங்கள் பிள்ளைகளின் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்த 157 பெற்றோரைப் பிரதிநிதிப்பதாக பீட்டர் லோ சேம்பர்ஸ் (பிஎல்சி) எனும் சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவர்களில் தொப்புள்கொடி ரத்தம் பாழானதால் பாதிக்கப்பட்ட பெற்றோர், பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ட்லைஃப் நிறுவனம் தகவல் அளித்த பெற்றோர் என இரு தரப்பினரும் அடங்குவர்.

மே 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், பெற்றோரின் கவலைகளையும் வினாக்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டதாக அது கூறியது.

முதற்கட்டமாக, கார்ட்லைஃப் சேவையை நாடிய பெற்றோரின் உரிமைகள், இழப்பீடுகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும் என்று பிஎல்சி கூறியது.

கார்ட்லைஃப் வங்கியின் 22 ரத்தச் சேமிப்புக் கலன்களில் ஏழின் வெப்பநிலை உகந்ததாக இல்லாததால் 7,500 அலகுகள் தொப்புள்கொடி ரத்தம் பாழானதாகக் கடந்த நவம்பரில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்