சீமெய், சாங்கி, பாசிர் ரிஸ், பொங்கோல் ஆகிய பகுதியில் வசிக்கும் பேருந்துப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் மூன்று புதிய பேருந்துச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட் திங்கள்கிழமை (மே 20) வெளியிட்டது.
புதிய பேருந்துச் சேவைகளான 20A, 39B, 39A ஆகியவை குறுகியகாலப் பயணப் பேருந்து சேவைகளாக இருக்கும் என எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது.
அதாவது, முழு வழித்தடத்திற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்லும் பேருந்துச் சேவையாக இருக்கும் என அது மேலும் கூறியது.
அந்த மூன்று பேருந்துச் சேவைகளும் உச்ச நேரங்களில் மட்டுமே இயங்கும் என்றும் வாரயிறுதி, பொது விடுமுறை நாள்களில் இயங்க மாட்டா என்றும் எஸ்பிஎஸ் டிரான்சிட் குறிப்பிட்டது.

