தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$5 மில்லியன் மதிப்புள்ள மின்சிகரெட் பறிமுதல்; வெளிநாட்டவர் இருவர் கைது

1 mins read
f4283259-29a2-4758-97ed-1041436812ea
இரண்டாவது ஆக அதிகமான இ வேப்பரைசர்கள் பறிமுதல் குறித்துச் சுகாதார அறிவியல் ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. - படம்: சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம்

‘இ வேப்பரைசர்’ எனும் மின்சிகரெட்டுகளையும் அவற்றின் பாகங்களையும் சுகாதார அறிவியல் ஆணையமும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் இணைந்து ஏப்ரல் 24ஆம் தேதி நடத்திய அமலாக்க நடவடிக்கையின்போது கைப்பற்றின. அவற்றின் மதிப்பு $5 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. இதன் தொடர்பில், தாய்லாந்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் இருக்கும் கிடங்கில் 400,000 க்கும் அதிகமான இ வேப்பரைசர்களையும் அவற்றின் பாகங்களையும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் கண்டதாகச் சுகாதார அறிவியல் ஆணையமும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் இணைந்து செவ்வாய்க்கிழமை (மே 21) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

இரண்டாவது ஆக அதிகமான மின்சிகரெட்டுகள் பறிமுதல் குறித்துச் சுகாதார அறிவியல் ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் கடந்த மார்ச் மாதத்தில், $6 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள மின்சிகரெட்டுகளையும் அவற்றின் பாகங்களையும் ஆணையம் பறிமுதல் செய்ததது என்றும் அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட தாய்லாந்தைச் சேர்ந்த இருவர்மீதும் செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கியிருந்த குற்றங்களுக்காக ஏப்ரல் 26ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. அவர்கள் இருவரும் 22 மற்றும் 30 வயதுடையவர்கள். அவர்கள் இருவரும் தொடர்ந்து விசாரணைக்கு உதவி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்