தமது தங்கையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆடவருக்கு மே 21ஆம் தேதியன்று 18 ஆண்டுகள் சிறையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
அந்தச் சிறுமியை அவரது நான்கு சகோதரர்களும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவ்வாறு செய்வதை மே 21ல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆடவர் முதலில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
கற்பழிப்புக்காக மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கப்பட்டபோது, கடும் பாலியல் குற்றங்கள் தொடர்பான மேலும் 16 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இப்போது அவருக்கு 22 வயது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைக் காக்க அவரது சகோதரர்களின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அச்சிறுமியை 2018ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அவரது சகோதரர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினர்.
அப்போது சிறுமி எட்டுக்கும் பன்னிரண்டு வயதுக்கும் இடைப்பட்டவராக இருந்தார்.

