சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து ஏஆர்டி பரிசோதனை கருவிகளுக்கான தேவை கூடியுள்ளது. சில மருந்துக் கடைகளில் அந்தக் கருவிகள் விற்றுத் தீர்ந்தன.
கடந்த வாரம் அந்தக் கருவிகளுக்கான தேவை 150 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்ததாக வாட்சன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. அதேபோல, ஏஆர்டி கருவி மற்றும் முகக்கவசத்திற்கான தேவை இருமடங்கு அதிகரித்ததாக என்டியுசி ஃபேர்பிரைஸ் கூறியுள்ளது.

