காலாண்டு அடிப்படையில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்தது

காலாண்டு அடிப்படையில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்தது

1 mins read
020b308f-41ae-402e-a216-3328be39bdec
காலாண்டு அடிப்படையில் 2024ஆம் ஆண்டு ஜனவரிக்கும் மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பொருளியல் 0.1 விழுக்காடு வளர்ச்சி கண்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காலாண்டு அடிப்படையில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்தது.

கடந்த ஓராண்டில் மற்ற காலாண்டுகளைவிட 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் மெதுவாக வளர்ச்சி கண்டது.

உற்பத்தித்துறையின் விரிவாக்கம் மெதுவடைந்ததே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலை வர்த்தக, தொழில் அமைச்சு மே 23ஆம் தேதியன்று வெளியிட்டது.

காலாண்டு அடிப்படையில் 2024ஆம் ஆண்டு ஜனவரிக்கும் மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பொருளியல் 0.1 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி 1.2 விழுக்காடாக இருந்தது.

2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குப் பிறகு 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி அதிகளவில் மெதுவடைந்துள்ளது.

2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி 0.5 விழுக்காடு குறைந்திருந்தது.

குறிப்புச் சொற்கள்