தீவு விரைவுச்சாலையில் மே 22ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்த பல வாகன விபத்தை அடுத்து, மூன்று பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் விபத்து நிகழ்ந்ததாக அதிகாலை 1.55 மணி அளவில் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை தெரிவித்தது.
மூன்று கார்களும் ஒரு டாக்சியும் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது.
54 வயது கார் ஓட்டுநர், 63 வயது டாக்சி ஒட்டுநர், டாக்சியில் பயணம் செய்த 40 வயது ஆடவர் ஆகியோர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது மூவரும் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான படங்கள் Singapore roads accident.com எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இரண்டு கார்களுக்கு நடுவே டாக்சி ஒன்று சிக்கியிருந்ததை அப்படங்களில் காண முடிந்தது.
டாக்சியின் பின்பகுதி அதற்குப் பின்னால் இருந்த காரின் முன்பகுதியின் மேல் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.