சிங்கப்பூரில் பதிவாகியுள்ள ஆகப் பெரிய பணமோசடி வழக்குடன் தொடர்புடைய 34 வயது சென் சிங்யுவானுக்கு மே 23ல் 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கம்போடியரான சென், மோசடிக் குற்றங்கள் தொடர்பாகச் சீனாவிலும் தேடப்பட்டு வருகிறார்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, மோசடிக் குற்றம் ஆகியவை தொடர்பாக அவருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக அவரையும் சேர்த்து ஏழு பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் அந்த ஏழு பேரில் சென் மட்டுமே நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மற்ற ஆறு பேரும் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சென் மீது மொத்தம் பத்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சென்னிடமிருந்து $23 மில்லியனுக்கும் அதிகமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.