குறிப்பிட்ட நாள்களில் பட்டம், ஆளில்லா வானூர்தி பறக்க தடை

1 mins read
e9b1462d-930f-4968-9fed-50f8bd7a617e
தேசிய தின அணிவகுப்பு நடைபெறும் பாடாங் வட்டாரம் உட்படச் சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளுக்கு இந்தத் தற்காலிகத் தடை பொருந்தும் எனச் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தின அணிவகுப்புக்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதில், பங்கேற்பதற்காகப் பயிற்சி மேற்கொள்ளும் தாழ்வாகப் பறக்கும் விமானங்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு ஆளில்லா வானூர்திகள் அனுமதியின்றிப் பறக்க வரும் மாதங்களில் தடை விதிக்கப்படும் எனச் சிங்கப்பூர் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (மே 23) தெரிவித்தது.

பெரும்பாலும் சனிக்கிழமைகளிலும் (ஜூன் 15, ஜூன் 22, ஜூன் 29, ஜூலை 13, ஜூலை 20, ஜூலை 27, ஆகஸ்ட் 3) இரண்டு செவ்வாய்க்கிழமைகளிலும் (மே 28, ஜூன் 11) தேசிய தின அணிவகுப்பு நடைபெறும் நாளான ஆகஸ்ட் 9 அன்றும் ஆளில்லா வானூர்தி, பட்டங்கள் ஆகியவை பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய தின அணிவகுப்பு நடைபெறும் பாடாங் வட்டாரம் உட்படச் சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளுக்கு இந்தத் தற்காலிகத் தடை பொருந்தும் என ஆணையம் மேலும் கூறியது.

இந்தக் கட்டுப்பாடுகள் பட்டங்களைப் பறக்க விடுவது, பலூன்கள் ஏற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கும் நீட்டிக்கப்படுகின்றன என்றும் ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்