தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்கியூ 321 விமான சம்பவம்: பேங்காக் மருத்துவமனைகளில் 43 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

1 mins read
e7dc020c-c9fd-4826-919f-955dc3265a60
எஸ்கியூ 321 விமானத்தில் ஏற்பட்ட சம்பவத்தில் காயமடைந்த பயணிகளில் எழுவர் பேங்காக்கின் சமித்திவெஜ் சிரிநகரின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எஸ்கியூ 321 விமானம் மே 21ஆம் தேதி கடுமையாக ஆட்டம் கண்டதில் 43 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் பேங்காக்கின் பல்வேறு மருத்துவமனைகளில் சனிக்கிழமை (மே 25) நிலவரப்படி சிகிச்சை பெற்று வருவதாக காயமடைந்தவர்களில் அதிகமானோருக்கு சிகிக்சை அளித்துவரும் பேங்காக் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆகக் கடைசி தகவல் வெளியிட்ட சமித்திவேஜ் சிரிநகரின் மருத்துவமனை சனிக்கிழமை நண்பகல் நிலவரப்படி தங்கள் மருத்துவமனையில் 34 பயணிகள் இருப்பதாக தெரிவித்தது. மேலும் எழுவர் சமித்திவெஜ் சுக்கும்வித் மருத்துவமனையிலும் இருவர் பேங்காக் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளது.

சமித்திவெஜ் சிரிநகரின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 34 பேரில் 15 பேர் ஆடவர்கள் என்றும் 19 பேர் மாதர் என்றும் அது கூறியது. இவர்கள் ஆஸ்திரேலியா, பிரிட்டன், மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் எழுவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் சமித்திவேஜ் சிரிநகரின் மருத்துவமனை விளக்கியது.

மேலும், சமித்திவேஜ் சிரிநகரின் மருத்துவமனையில் இருந்து இருவருக்கு சிகிச்சை முடிந்துவிட்டது என்றும் மேலும் இருவர் சமித்திவெஜ் சுக்கும்வித் மருத்துவமனையிலிருந்து தங்கள் உறவினர்கள் சிகிச்சை பெறும் சமித்திவேஜ் சிரிநகரின் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை (மே 24) அன்று பேங்காக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சிங்கப்பூரர் ஒருவர் சிகிச்சை முடிந்து திரும்பிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்