கிளமெண்டி சாலையிலும் வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலையிலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பெரிய குழுக்களில் சைக்கிளோட்டிய 25பேர் சனிக்கிழமையன்று (மே 25) பிடிபட்டனர்.
அண்மையில் நிலப் போக்குவரத்து ஆணையமும் போக்குவரத்து காவல்துறையினரும் இணைந்து கட்டுப்பாட்டை மீறி சைக்கிளோட்டும் நபர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது அவர்கள் பிடிபட்டதாக ஆணையம் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்குவந்த கட்டுப்பாடுகளின்படி, 5பேர் கொண்ட சைக்கிளோட்டிகள் ஒருவர் பின் ஒருவராக ஓர் குழுவாகவோ 10பேர் கொண்ட குழுவில் இரு சைக்கிளோட்டிகள் ஒருவருக்கு அருகில் ஒருவராய் பயணம் செய்யலாம்.
மேலும், சைக்கிள் ஓட்டும் குழுக்களுக்கு இடையே குறைந்தபட்சம் 30 மீட்டர் தூரம் இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.
இக்கட்டுபாடுகளை மீறும் சைக்கிளோட்டிகளுக்கு $150 அபராதம் விதிக்கப்படும்.

