சுவா சூ காங்கில் பொதுப் பயனீட்டுக் கழகத்துக்குச் சொந்தமான நீர்நிலையத்தில் சுத்திகரிப்புப் பணியின்போது நச்சுவாயுவை சுவாசித்து கடும் பாதிப்புக்குள்ளான இரு ஊழியர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்று வரும் ஊழியர் ஒருவரின் முதலாளி இத்தகவலை மே 27ஆம் தேதியன்று தெரிவித்தார்.
மே 23ஆம் தேதியன்று நச்சுவாயு சுவாசித்த ஊழியர்கள் மூவர் சுயநினைவு இழந்தனர்.
இதையடுத்து, அவர்கள் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தியாவைச் சேர்ந்த 40 வயது ஊழியர் அதே நாளில் மாண்டார்.
மற்ற இருவரும் மலேசியர்கள். அவர்கள் இருவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.