சிராங்கூன் வட்டாரத்தில் மே 27ஆம் தேதியன்று நிகழ்ந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் 41 வயது மோட்டார்சைக்கிளோட்டி மாண்டார்.
அந்த ஆடவர் தமது மோட்டார்சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து, அது சாலையில் சறுக்கியதாகக் கூறப்படுகிறது.
சிராங்கூன் கார்டன் வேயை நோக்கிச் செல்லும் லோரோங் சுவானில் விபத்து நிகழ்ந்ததாக காலை 6.20 மணி அளவில் தகவல் கிடைத்தது என்று காவல்துறை கூறியது.
லோரோங் சுவானில் உள்ள கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையத்துக்கு அருகில் விபத்து நிகழ்ந்ததாக ஷின்மின் நாளிதழ் தெரிவித்தது.
மோட்டார்சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் தெரிவித்தார்.
விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.