எரிசக்திச் சந்தை ஆணையத்துக்குபுதிய தலைமை நிர்வாக அதிகாரி

எரிசக்திச் சந்தை ஆணையத்துக்குபுதிய தலைமை நிர்வாக அதிகாரி

1 mins read
7e400f73-5d16-43d6-beeb-91538868231a
புவா கோக் கியோங் (இடம்), நியாம் ஷி சுன். - படம்: வர்த்தக, தொழில் அமைச்சு

எரிசக்திச் சந்தை ஆணையம், வருகிற ஜூலை 8ஆம் தேதியிலிருந்து புதிய தலைமை நிர்வாக அதிகாரியின்கீழ் செயல்படவிருக்கிறது.

2016ஆம் ஆண்டிலிருந்து உள்துறை அமைச்சில் கொள்கைப் பிரிவின் துணைச் செயலாளராக இருந்த புவா கோக் கியோங் அந்தப் புதிய பொறுப்பை ஏற்கிறார்.

தற்போது ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள நியாம் ஷி சுன் என்பவரிடமிருந்து பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

அதே சமயத்தில் உள்துறை அமைச்சின் கொள்கைப் பிரிவின் துணைச் செயலாளர் பொறுப்பை நியாம் ஷி சுன் ஏற்கிறார்.

இந்த விவரங்களை வர்த்தக, தொழில் அமைச்சு திங்கட்கிழமை (மே 27) தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்