தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதலீடு மோசடி: $541,000 மேல் ஏமாற்றியவருக்குச் சிறை

1 mins read
d45aa633-875b-4bb2-ab85-b1f34cca2fb6
படம்: - பிக்சாபே

முதலீட்டுத் திட்டம் ஒன்றின் மூலம் $541,000க்கு மேல் இருவரைத் தன் கூட்டாளிகள் இருவருடன் இணைந்து ஏமாற்றிய 35 வயது லிம் ஜூன் ஹொங்குக்கு இரண்டு ஆண்டுகள் ஆறு மாத சிறைத் தண்டனை செவ்வாய்க்கிழமையன்று (மே 28) விதிக்கப்பட்டது.

இக்குற்றத்தை லிம், 2016ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்ததாகவும் அப்போது அவர் சிங்கப்பூர் ஆயுதப்படையில் பணிபுரிந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இருவரில், 44 வயது ஆடவர் $400,000க்கு மேல் இழந்ததாகவும் 43 வயது மாது $141,000க்கு மேல் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

‘விகான் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ என்ற நிறுவனத்தில் தற்போது இயக்குநராக இருக்கும் லிம், தன்மீது சுமத்தப்பட்ட பாதிக்கப்பட்ட ஆடவர் தொடர்புடைய $321,000 மோசடிக் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

மீதமுள்ள தொகை தொடர்பான மற்ற மூன்று குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கும்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

லிம்மின் கூட்டாளிகள் என்று கூறப்படும் இவ்வழக்கில் தொடர்புடைய 28 வயது டெக்ஸ்டர் லாவ் யூ ஹொங், 36 வயது காங் சீ வீ ஆகிய இருவரின் வழக்குகள் விசாரணைகள் நிலுவையில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்