தற்காப்பு உச்சநிலை மாநாடு: ஷங்ரிலா ஹோட்டல், தேசிய கலைக்கூடம் அருகில் உள்ள சாலைகளைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்காப்பு உச்சநிலை மாநாடு: ஷங்ரிலா ஹோட்டல், தேசிய கலைக்கூடம் அருகில் உள்ள சாலைகளைத் தவிர்க்க அறிவுறுத்தல்

2 mins read
3d7ec52b-a946-47d7-8ea0-0ccbe287024c
2023ஆம் ஆண்டில் ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற தற்காப்பு உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு அருகில் உள்ள சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டன. பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் தற்காப்பு உச்சநிலை மாநாடு ஷங்ரிலா ஹோட்டலில் மே 31லிருந்து ஜூன் 2 வரை நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் மற்றும் பேராளர்களுக்கு சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்தில் ஜூன் 1ஆம் தேதி இரவு விருந்துபசரிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உச்சநிலை மாநாடு நடைபெறும் நாள்களில் ஷங்ரிலா ஹோட்டலுக்கு அருகில் உள்ள சாலைகளைத் தவிர்க்கும்படி வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஆண்டர்சன் சாலையும் ஆரஞ்சு குரோவ் சாலையும் அவற்றில் அடங்கும்.

டங்ளின் சாலையிலிருந்து ஸ்டீவன்ஸ் சாலை அல்லது பெல்மோரல் சாலையை நோக்கிச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் ஸ்காட்ஸ் சாலையைப் பயன்படுத்தலாம்.

ஸ்டீவன்ஸ் சாலையிலிருந்து ஆர்ச்சர்ட் சாலையை நோக்கிச் செல்பவர்களுக்கும் இது பொருந்தும்.

மே 30ஆம் தேதி இரவு 11 மணியிலிருந்து ஜூன் 2ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆர்ட்மோர் பார்க் லேம்ப் போஸ்ட் 8-ஆண்டர்சன் சாலை இடையிலான பாதை மூடப்பட்டிருக்கும்.

எனவே, ஆர்ட்மோர் பார்க்கை நோக்கிச் செல்பவர்கள் டிரேகாட் பார்க் அல்லது டிரேகாட் டிரைவ்வைப் பயன்படுத்த வேண்டும்.

G,W,X,Y ஆகிய எழுத்துகளுடன் தொடங்கும் எண்களைக் கொண்ட சரக்கு வாகனங்கள் ஆண்டர்சன் சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது.

ஷங்ரிலா ஹோட்டலில் வாகன நிறுத்துமிடங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே இருக்கும் என்பதால் அங்கு செல்பவர்கள் பொதுப் போக்குவரத்து, டாக்சி அல்லது தனியார் வாடகை கார்களைப் பயன்படுத்த வேண்டும்.

தேசிய கலைக்கூடத்துக்கு அருகில் உள்ள சில சாலைகளும் தெருக்களும் ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 2ஆம் தேதி காலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

நார்த் பிரிட்ஜ் சாலை, ஹைய் ஸ்திரீட் ஆகிய இடங்களில் வழக்கத்துக்கு மாறாக வாகனங்கள் மெதுவாகச் செல்லும் நிலை ஏற்படக்கூடும் என்பதால் அந்தச் சாலைகளைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தேசிய கலைக்கூடத்தில் மே 31ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 1ஆம் தேதி நள்ளிரவு வரை வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.

குறிப்புச் சொற்கள்