ஸ்டார்ஹப் இணையச் சேவை தடை: 7,000 புகார்கள் பதிவு

ஸ்டார்ஹப் இணையச் சேவை தடை: 7,000 புகார்கள் பதிவு

1 mins read
e142bda8-b645-4f5a-b477-c8978eae67ae
வியாழக்கிழமை (மே 30) அன்று சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் ஸ்டார்ஹப் இணையச் சேவையில் தடை ஏற்பட்டதாக வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்துள்ளனர். - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வியாழக்கிழமை (மே 30) அன்று குறைந்தது இரண்டு மணிநேரம் இணையச் சேவையில் தடை ஏற்பட்டதாக ஸ்டார்ஹப் வாடிக்கையாளர்கள் பலர் புகார் கூறினர்.

இது தொடர்பாக ஸ்டார்ஹப்பின் ஃபேஸ்புக் பதிவில், பொங்கோல், செங்காங், ஹாவ்காங், ஈசூன், அம் மோ கியோ உட்பட பல இடங்களில் இணையச் சேவைத் தடை ஏற்பட்டதால் பலர் தங்களால் வீடுகளில் இருந்து வேலை செய்ய முடியாமல் போனதாக சமூக ஊடகங்களில் கூறினர்.

டவுன்டிடெக்டர் என்ற இணையச் சேவைத் தடையை கண்காணிக்கும் அமைப்புக்கு வியாழக்கிழமை (மே 30) காலை 11.31 மணிக்கு கிட்டத்தட்ட 993 புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இது பின்னர் 11.46 மணிக்கு 6,987 புகார்கள் என அதிகரித்ததாகவும் பின்னர் பிற்பகல் 1.00 மணிக்கும் 500 புகார்களுக்குமேல் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதுபற்றிக் கூறும் டவுன்டிடெக்டர், இந்தத் தளங்களிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளைத் தான் அப்போதைக்கு அப்போது ஆராய்வதாகவும் இதன் மூலம் தான் இணையத் தடைச் சம்பவங்களை தொடக்க நிலையிலேயே கண்டறிவதாகத் தெரிவித்தது.

“நான் வேலை தொடர்பான சந்திப்புக் கூட்டத்தின் நடுவில் இருந்தபோது வை-ஃபை சேவையில் தடை ஏற்பட்டது,” என்று தமது ஃபேஸ்புக் பதிவில் திரு காமிச்சி பிற்பகல் 12.20 மணிக்கு பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்