தந்தைக்கு உடல்நலக் குறைவு எனப் பொய்யுரைத்து பெற்ற பணத்தை மாதிடம் திருப்பித் தர உத்தரவு

தந்தைக்கு உடல்நலக் குறைவு எனப் பொய்யுரைத்து பெற்ற பணத்தை மாதிடம் திருப்பித் தர உத்தரவு

2 mins read
b48ec044-c667-49e8-b067-c24561d5ca1a
படம். - தமிழ் முரசு

பல்லாண்டுகளாக தன்னை ஒருவர் காதலிக்கிறார் என்று மாது ஒருவர் நம்பினார்.

இதன் காரணமாக அந்த ஆடவர் தனது தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவரது மருத்துவச் செலவுகளால் தான் கடனாளியாக ஆகிவிட்டதாகக் கூறியதை நம்பி அந்த மாது அந்த ஆடவருக்கு பல சந்தர்ப்பங்களில் பண உதவி செய்துள்ளார்.

டெரிக் இங் என்ற அந்த ஆடவருக்கு $212,850ஐ தந்து உதவியபின் அவர், 2014ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டுவரை அந்த ஆடவர் தம்மை ஏமாற்றி வந்துள்ளதை அந்த மாது உணர்ந்தார்.

உண்மையில் திரு இங், 41, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டின் முழுமையான உரிமையாளர். அதை அவர் 2019ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். அதில் வேறொரு மாதுடன் வாழ்ந்து வந்தார். அதற்கும் மேலாக அவர் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு உதவி செய்த திருவாட்டி லீ என்ற அந்த 42 வயது மாது அவருக்கு அளித்த பண உதவியை திரும்பப் பெறத் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

வழக்கு விசாரணையில் தான் அந்த ஆடவர் மீது தொடர் அக்கறை கொண்டு அவருக்கு பண உதவி செய்த பல குறுந்தகவல்களை நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றார். அத்துடன், திரு லீ, விலை உயர்ந்த சொகுசு கார் ஓட்டிய, விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிந்த புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், ஆடவரின் தாய் அவருக்கு ரோலெக்ஸ் கைக்கடிகாரம் தந்ததும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் வியாழக்கிழமை (மே 30) அன்று தீர்ப்பளித்த மாவட்ட நீதிபதி ஜாஸ்மின் கோரிடம், திருவாட்டி லீ தன்னிடம் ஆடவர் பொய்யுரைத்து ஏமாற்றிவிட்டதாகக் கூறினார். அதை ஏற்ற நீதிபதி, திரு இங், திருவாட்டி லீக்கு $210,050 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்