அதிகபட்சம் ஒரு மில்லியன் வாகன ஓட்டுநர்களுக்கு இலவச நெட்ஸ் மோட்டோரிங் அட்டை

அதிகபட்சம் ஒரு மில்லியன் வாகன ஓட்டுநர்களுக்கு இலவச நெட்ஸ் மோட்டோரிங் அட்டை

2 mins read
3e25d5e1-4de2-4601-af10-648fed87235e
நெட்ஸ் மோட்டோரிங் அட்டை. - படம்: நெட்ஸ்
Google News Preferred Icon

அதிகபட்சம் ஒரு மில்லியன் வாகன ஓட்டுநர்களுக்கு நெட்ஸ் மோட்டோரிங் அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கள் வாகனத்தில் புதிய ஓபியு சாதனப்பெட்டியைப் பொருத்தும்போது அவர்களுக்கு இந்த அட்டை தரப்படும் என்று நெட்ஸ் நிறுவனம் மே 30ஆம் தேதி கூறியது.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து புதிய ஓபியு சாதனப்பெட்டியைப் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மே 1ஆம் தேதியிலிருந்து பதிவு செய்யப்படும் புதிய வாகனங்கள் புதிய ஓபியு சாதனப்பெட்டியுடன் வரும்.

ஓபியு சாதனப்பெட்டிகளைப் பொருத்தும் புதிய வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களின் உரிமையாளர்களுக்கு இலவச நெட்ஸ் மோட்டோரிங் அட்டையை நிலப் போக்குரவரத்து ஆணையம் விநியோகிக்கும் என்று நெட்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

வழங்கப்படும் நெட்ஸ் அட்டைகளைப் புதிய ஓபியு சாதனப்பெட்டியில் பயன்படுத்தலாம். அவற்றைப் பயன்படுத்தி சாலை மின் கட்டணத்தைச் (இஆர்பி 2.0) செலுத்தலாம்.

இலவச அட்டைக்குள் பணம் நிரப்பப்பட்டிருக்காது. ஆனால் அதன் மதிப்பு கிட்டத்தட்ட $5.

அந்த அட்டைகளை சிங்கப்பூரில் உள்ள அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் பயன்படுத்தலாம்.

மே 1ஆம் தேதிக்கு முன்பு ஓபியு சாதனப்பெட்டியைப் பொருத்திய வாகன ஓட்டுநர்களுக்கு ஜூன் மாத நடுப்பகுதியிலிருந்து அட்டைகள் தபால் வழி அனுப்பிவைக்கப்படும்.

மே 1ஆம் தேதிக்கும் ஜூன் 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஓபியு சாதனப்பெட்டியைப் பொருத்தும் வாகன ஓட்டுநர்களுக்கு பெட்டி பொருத்தப்பட்ட தேதியிலிருந்து ஐந்து வாரங்களுக்குள் அட்டைகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஓபியு சாதனப்பெட்டியைப் பொருத்துபவர்களுக்கு அன்றே அட்டைகள் வழங்கப்படும்.

இதுகுறித்து உதவி தேவைப்படுவோர் 6377 2255 எனும் எண் மூலம் நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்