இணையத் தாக்குதல்: மற்ற நாடுகள் உதவி கோரும் என அமெரிக்கா எதிர்பார்ப்பு

இணையத் தாக்குதல்: மற்ற நாடுகள் உதவி கோரும் என அமெரிக்கா எதிர்பார்ப்பு

1 mins read
49922a0e-0dbf-43fb-94cc-eb78368292e5
அமெரிக்காவின் இணையத் தளபத்தியத்தின் தலைவரும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் இயக்குநருமான ஜெனரல் ஹக். - படம்: புளூம்பர்க்

இணையத் தாக்குதல்களிலிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாக அமெரிக்காவின் இணையத் தளபத்தியத்தின் உதவியை மற்ற நாடுகள் நாடும் என்று அதன் புதிய தலைவர் ஜெனரல் திமத்தி ஹக் எதிர்பார்க்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக இவ்வாண்டு பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்படும் என்று அவர் நம்புகிறார்.

மிக விரைவாக மாறிவரும், வளர்ச்சி காணும் தொழில்நுட்பம் இதற்குக் காரணம் என்றார் அவர்.

ஆக அண்மைய மிரட்டல்களை எதிர்கொள்வதில் பல நாடுகள் சிரமப்படுவதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் இயக்குநருமான ஜெனரல் ஹக் கூறினார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் 21வது ஷங்ரிலா கலந்துரையாடலில் அவர் கலந்துகொண்டார். அப்போது பேட்டியளித்த ஜெனரல் ஹக் இக்கருத்தைத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்