‘பிரிட்ஜிங் பிசினஸ் ஹொரைசன்ஸ்’ எனும் வர்த்தகங்களை அனைத்துலக மயமாக்கும் புதிய திட்டத்தை டிபிஎஸ் வங்கி திங்கட்கிழமை (ஜூன் 3) அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தை சிங்கப்பூர் தொழில் சம்மேளனம், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் ஆகியவை ஆதரிக்கின்றன.
இந்தத் திட்டம் அடுத்த 12 மாதங்களில், புதிய சந்தைகளில் நுழைய ஆர்வமுள்ள சிங்கப்பூர் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் வட்டாரங்களில் செயல்படும் 1,000 வர்த்தகங்களுக்கு ஆதரவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறிதல், சந்தைக்குள் நுழைய தேவையான உத்திகளை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல், வெளிநாட்டுச் சந்தைக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றிற்கு இத்திட்டம் ஆதரவு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வர்த்தகங்கள் தங்களை இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

