தெம்பனிஸ் வட்டாரத்தில் ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்தவர் கைது

தெம்பனிஸ் வட்டாரத்தில் ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்தவர் கைது

1 mins read
acaf05f2-370d-480b-bd29-e7cf9204b89d
கைது செய்யப்பட்ட ஆடவரிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை
multi-img1 of 2

தெம்பனிஸ் வட்டாரத்தில் ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்படும் 39 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

தெம்பனிஸ் சென்ட்ரல் 1ல் உள்ள உரிமம் பெற்ற கடன் கொடுப்பவரின் கடையில் ஜூன் மாதம் 3ஆம் தேதி பிற்பகல் 2.10 மணி அளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த ஆடவர் முகமூடி, தொப்பி அணிந்திருந்ததாகவும் பெண் ஒருவரிடமிருந்து $6,095 ரொக்கத்தை கொள்ளையடித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்து அரை மணி நேரத்துக்குள் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறியது.

கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டதாகவும் சந்தேக நபரிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

துரிதமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை பிடோக் காவல்துறைப் பிரிவுக்குத் தலைமைதாங்கும் உதவி ஆணையர் ஜஸ்டின் வோங் பாராட்டினார்.

கைது செய்யப்பட்டவர் மீது ஜூன் 4ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்றிலிருந்து 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்