தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$3 பி. பணமோசடி வழக்கு: ஆடவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள்

1 mins read
9684bf13-0b4a-4b06-82e2-2ebc0347b53b
‘பிரேண்ட்’ மேலாளராகவும் வர்த்தக ஆலோசகராகவும் பணிபுரிவதாக சைப்பிரஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயது வாங் டெஹாய் பொய் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: செல் குலாப்பா ஓவியம்

சிங்கப்பூரில் பதிவான $3 பில்லியன் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய வழக்குடன் தொடர்புடைய கடைசி நபர் மீது மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

‘பிரேண்ட்’ மேலாளராகவும் வர்த்தக ஆலோசகராகவும் பணிபுரிவதாக சைப்பிரஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயது வாங் டெஹாய் பொய் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றத்தை அவர் 2018ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் புரிந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தகுந்த வேலை அனுமதி அட்டையின்றி பணிப்பெண் ஒருவரை அவர் வேலையில் அமர்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவானது.

ஜூன் 4ஆம் தேதியன்று அவர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் அவர் மீது இந்த நான்கு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

வாங், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். அன்று முதல் கடந்த ஒன்பது மாதங்களாக அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வாங் ஜூன் 7ல் ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்