குழந்தை முகத்தில் தலையணை வைத்து அழுத்தியதாக தாய்மீது குற்றச்சாட்டு

குழந்தை முகத்தில் தலையணை வைத்து அழுத்தியதாக தாய்மீது குற்றச்சாட்டு

1 mins read
a780d3e1-59e9-4ba2-9704-f896244c1ca6
வழக்கு விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் நிரந்தரவாசியான 34 வயது பெண் ஒருவர், தமது பெண் குழந்தையின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அந்தப் பெண் இரண்டு முறை தலையணையைப் பயன்படுத்தி குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படுத்தியதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அந்த பெண் தமது நடவடிக்கைகளில் ஈடுபடும்போது குழந்தைக்கு ஐந்து மாதம் ஆகியிருந்தது.

மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக சந்தேக நபர் மீது முதலில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் தற்போது அவர்மீது குழந்தை துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முதல் சம்பவம் கடந்த நவம்பர் மாதத்திலும் இரண்டாவது சம்பவம் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திலும் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

வழக்கு விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 8 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ 8,000 வெள்ளி வரையிலான அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
குற்றம்கைதுநீதிமன்றம்