அனைத்துப் பிரிவுகளிலும் சிஓஇ கட்டணம் சரிவு

1 mins read
3ad4c2d4-2ee8-4911-af8d-d5e693cedebd
அனைத்து வாகனப் பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் குறைந்துள்ளது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

அனைத்து வாகனப் பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் குறைந்துள்ளது.

சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் 4.9 விழுக்காடு குறைந்து $88,200ஆகப் பதிவானது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அது $92,700ஆக இருந்தது.

பெரிய வகை கார்களுக்கான சிஓஇ கட்டணம் $105,689லிருந்து $100,607ஆகக் குறைந்தது.

பொதுப் பிரிவுக்கான சிஓஇ கட்டணம் 3.2 விழுக்காடு குறைந்தது.

அது $105,002லிருந்து $101,600ஆகச் சரிந்தது.

மோட்டார் சைக்கிள்களைத் தவிர்த்து வேறு வாகனங்களுக்குப் பொதுப் பிரிவைப் பயன்படுத்தலாம்.

ஆனால், அது பெரும்பாலும் பெரிய வகை கார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

சரக்கு வாகனங்களுக்கான சிஇஓ $72,001லிருந்து $70,589ஆகக் குறைந்தது.

மோட்டார் சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் 3.5 விழுக்காடு சரிந்தது.

அது $9,311லிருந்து $8,989ஆகக் குறைந்தது.

குறிப்புச் சொற்கள்